ரஜினியின் ஆன்மீக அரசியல் எடுபடாது-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

494

தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் ஆன்மீக அரசியல் எடுபடாது என முதலமைச்சர் நாரயணசாமி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் புதிதாக கட்சி ஆரம்பிக்க உள்ளதால், அவருக்கு தனது வாழ்த்துக்கைளை தெரிவித்து கொண்டார். அவரது முடிவு நல்லதாக இருந்தாலும், அறிவிப்பு தெளிவு இல்லாமல் இருப்பதாக நாராயண சாமி குறிப்பிட்டார். தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறிய அவர், ரஜினியின் ஆன்மீக அரசியல் இங்கு எடுபடாது என திட்டவட்டமாக குறிப்பிட்டார். அவரது அரசியல் பிரவேசம் குறித்து, காலம் தான் பதில் சொல்லும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.