ரஜினிகாந்த் அரசிலுக்கு வந்தால் அது அவருக்குத்தான் ஆபத்து என்று பாஜக மூத்தத் தலைவர்…..

211

ரஜினிகாந்த் அரசிலுக்கு வந்தால் அது அவருக்குத்தான் ஆபத்து என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், அது அவருக்குத்தான் ஆபத்தாக முடியும் என்றார். குட்கா தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு வந்தப் பிறகு பார்க்கலாம் எனக் குறிப்பிட்டார். தமிழக அரசியல் தலைவர்கள் இங்குப் புலியாக இருந்தாலும், டெல்லிக்கு சென்றால் பூனைக் குட்டிகளாக மாறி விடுவதாக அவர் தெரிவித்தார். அதிமுகவைப் பொருத்தவரை சசிகலா அணி மட்டுமே உள்ளதாகவும், தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமைக் குறித்து முதலமைச்சரை சந்தித்துப் பேச இருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.