இரண்டு மாதத்திற்குள் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன் : நடிகர் ரஜினிகாந்த்

310

இன்னும் இரண்டு மாதத்திற்குள் மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
காலா திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றிருந்தார். இரண்டு வார காலத்திற்கு பின்பு அவர் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், காலா திரைப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பிற்காக வரும் 24 ஆம் தேதி மீண்டும் மும்பை செல்ல உள்ளதாக கூறினார். இரண்டு மாதத்திற்குள் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.