திரைப்பட தொழிலாளர்கள் பிரச்சைனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்

320

திரைப்பட தொழிலாளர்கள் பிரச்சைனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சி சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து பெப்சி சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக நீடித்துவரும் போராட்டத்தையடுத்து பெப்சி நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினர்.
இதையடுத்து பெப்சி வேலைநிறுத்தம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி தரப்பினர் பேச்சுவாரத்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தனக்கு பிடிக்காத சொற்களில் வேலைநிறுத்தம் என்ற சொல்லும் அடங்கும் என்று தெரிவித்துள்ள அவர், கவுரவம் பார்க்காமல் பொது நலன் கருதி இரு தரப்பினரும் சுமூக தீர்வு காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.