கட்சி கொடியை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது-நடிகர் ரஜினிகாந்த்!

538
Indian movie superstar Rajinikanth, center, gives thumbs up sign to his fans after announcement to launch his own political party, in Chennai, India, Sunday, Dec. 31, 2017. Rajinikanth is entering politics in his southern Indian state with a plan to launch his own party, calling it his duty. The 67-year-old told his cheering supporters that his objective is to change the system and bring good governance to Tamil Nadu. (AP Photo/R.Parthibhan)

கட்சி கொடியை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ம் வகுப்பு முடித்த உடன் 2 மாதம் பத்திரிகை ஒன்றில் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். தனது அரசியல் வருகைக்கு பத்திரிகையாளர்கள் உதவி தேவை என்று வேண்டுகோள் விடுத்த ரஜினிகாந்த், கட்சி கொடியை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். மிகப் பெரிய புரட்சிகள் தமிழகத்தில் இருந்து துவங்குவதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், உண்மையான, நேர்மையான, சாதி பேதமற்ற அரசியலே ஆன்மீக அரசியல் என்று விளக்கம் அளித்தார்.