அரசியல் நிலவரம் குறித்து மாவட்ட இளைஞரணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை.

516

அரசியலுக்கு ஆயத்தமாகி வரும் ரஜினிகாந்த், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என கூறி நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு வலுசேர்க்கும் விதமாக உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒருங்கிணைத்தார். இதற்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களையும் ரஜினிகாந்த் நியமித்துள்ளார். இதுதவிர அவ்வபோது சில தலைவர்களை சந்தித்து அரசியல் ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்ட இளைஞரணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அரசியல் கட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வந்துள்ளது.