சீருடையில் இருக்கும் காவலர்களை தாக்கியது வன்முறையின் உச்சக்கட்டம் – நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

477

சீருடையில் இருக்கும் காவலர்களை தாக்கியது வன்முறையின் உச்சக்கட்டம் என்று நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அப்போது மைதானத்தை முற்றுகையிட வந்த போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதில் ஆத்திரமடைந்த சிலர் பணியிலிருந்த காவலர்களை தாக்கியதால் அப்பகுதியே பரபரப்பானது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், சீருடையில் இருக்கும் காவலர்கள் தாக்கப்பட்டது வன்முறையின் உச்சக்கட்டம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பணியில் இருக்கும் காவலர்களை தாக்கும் நபர்களை தண்டிக்க கடுமையான சட்டம் தேவை எனவும் வலியுறுத்தியுள்ள அவர், இதுபோன்ற வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எரியவில்லை என்றால் நாட்டிற்கே பேராபத்து ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்