ரஜினிகாந்தின் புதிய படம் அறிவிப்பு : “சன் பிக்சர்ஸ்” தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக அறிவிப்பு ..

542

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தை, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகிறது. அரசியல் பயணத்துக்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அவர், ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்தநிலையில், ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.