நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்த மெர்சல் படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு …!

352

நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்த மெர்சல் படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. குறித்த வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்திற்கு ஆதரவாக அரசியல்கட்சியினர், திரைப்படத்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே போல் நடிகர் கமலஹாசனும், மெர்சல் படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து நடிகர் கமலை மெர்சல் படக்குழுவினர் நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மெர்சல் படக்குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நாட்டின் முக்கிய பிரச்சினை குறித்து விவாதித்த மெர்சல் படக்குழுவினருக்கு பாராட்டு என தெரிவித்தார். இதையடுத்து ரஜினிகாந்தின் டுவிட்டருக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்து, உங்கள் ஆதராவுக்கு நன்றி என பதில் டுவிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.