தமிழகத்தில் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன், இமயமலைக்கு ரஜினிகாந்த் நாளை ஆன்மீகப்பயணம் மேற்கொள்கிறார்..!

392

தமிழகத்தில் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன், இமயமலைக்கு ரஜினிகாந்த் நாளை ஆன்மீகப்பயணம் மேற்கொள்கிறார்.நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி, தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, காலா, 2.0 ஆகிய படங்களின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வரும்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மேலும் ஒரு புதிய படம் ஒன்றில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த நிலையில், ரஜினிகாந்த் நாளை இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் சிம்லா செல்லும் அவர், அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று, ஆன்மீக வழிகாட்டிகள், குருமார்களிடம் ஆசி பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.