கருணாநிதியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் | இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல் ..!

417

கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் கடந்த 31 ம் தேதி ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அறிவித்தார். மேலும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும் கூறினார். இந்நிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க இருப்பதாகவும், அரசியல் கட்சி தொடங்க அவரிடம் ஆசி பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதியை சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.