நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

0
439

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த தற்போது நடித்து வரும் காலா படத்தில், அவர் நடிக்க காட்சிகள் அனைத்தும் அடுத்த மாதத்துக்குள் படமாக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, அடுத்த மாத இறுதியிலும், அக்டோபர் முதல் வாரத்திலும் ரஜினிகாந்த், மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, ஏற்கனவே விடுபட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருப்பூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார். அப்போது அரசியல் பிரவேசம் குறித்த தனது இறுதி முடிவை ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY