டார்ஜிலிங்கில் ரஜினி தங்கிய தனியார் விடுதிக்கு ரஜினிகாந்த் இல்லம் என பெயர் மாற்றம்..!

262

டார்ஜிலிங்கில் நடிகர் ரஜினிகாந்த் தங்கிய தனியார் விடுதிக்கு, ரஜினிகாந்த் இல்லம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. இதற்கென, குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற தனியார் விடுதி ஒன்றில் ரஜினிகாந்த் 10 நாட்கள் தங்கியுள்ளார். இந்நிலையில், அவரின் நினைவாக அந்த விடுதிக்கு ரஜினிகாந்த் இல்லம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த விடுதி பிரபலம் அடைந்துள்ளது. இதனிடையே, ரஜினிகாந்த் பருகிய தேநீருக்கு தலைவா ஸ்பெஷல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.