ரஜினிகாந்த் உடல் பரிசோதனை இன்றிரவு அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1421

ரஜினிகாந்த் உடல் பரிசோதனை இன்றிரவு அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கு ரஜினிகாந்த் உடல் பரிசோதனை செய்ய செல்வதாகவும், அங்கு பத்து நாட்கள் தங்கியிருந்து முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் ஜூன் மாதம் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், அவருடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பும் காலா பட ரிலீஸை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரஜினி மக்கள் மன்றத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனவும் தெரிய வந்துள்ளது.