அதிமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி – ரஜினி

165

கருணாநிதி நினைவிடம் தொடர்பாக, தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருந்தால், நானே களத்தில் இறங்கி போராடி இருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாகக் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் ஃபெப்சி அமைப்பின் சார்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைப்பெற்றது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், நாசர், விஷால், விக்ரமன், குஷ்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், அதிமுக உருவாக காரணமாக இருந்த கருணாநிதிக்கு, அதிமுக ஆண்டு விழாவின் போது, எம்ஜிஆர் படத்தின் அருகே அவருடைய படத்தையும் வைக்க வேண்டும் என்றார்.

எத்தனையோ துரோகங்கள், வஞ்சனைகளை எதிர்கொண்டு, 50 ஆண்டு காலம் தமிழகத்தில் ஒரு இயக்கத்தை கருணாநிதி கட்டிக்காத்துள்ளதாக அவர் தெரிவித்தார். கருணாநிதி நினைவிடம் தொடர்பாக, தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருந்தால், நானே களத்தில் இறங்கி போராடி இருப்பேன் எனவும் அவர் ஆவேசமாக தெரிவித்தார்.