ரஜினியின் சின்ன வார்த்தைகள் கூட பெரிதாக விமர்சிப்பு – கராத்தே தியாகராஜன்

301

நடிகர் ரஜினிகாந்தின் குரல் தனிப்பட்ட குரல் என்றும், அவர் யாருக்கும் உடன்பட்டவர் அல்ல என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை, கராத்தே தியாகராஜன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை பற்றி ரஜினிகாந்த் தவறாக எதுவும் கூறவில்லை என்றார். போராட்டத்திற்கு ஒரு சில சமூக விரோதிகள் தான் காரணம் என்றும், வன்முறை சம்பவத்திற்கு உளவுத்துறையும் தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று ரஜினி கூறியதாக கராத்தே தியாகராஜன் சுட்டிக்காட்டினார். ரஜினியின் குரல் தனிப்பட்ட குரல் என்றும், அவர் யாருக்கும் உடன்பட்டவர் கிடையாது என அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.