ரஜினிக்கு அதிமுக நாளேடு புகழாரம்..!

175

ரஜினிகாந்த் மனம் திறந்து மனசாட்சியோடு பேசியிருக்கிறார் என்று அ.தி.மு.க.வின் நமது அம்மா நாளிதழில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சம்பவம் குறித்து பேசிய ரஜினிகாந்த், சமூக விரோத சக்திகளே கலவரத்துக்கு முக்கிய காரணம் என்றும் தொடர்ந்து போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் எனவும் ஆவேசமாக கூறினார். ரஜினிகாந்தின் கருத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்று கட்டுரை வெளியிட்டுள்ளது. காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும் என்று தலைப்பில் அந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

அதில் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என முதல்வரின் கருத்தையே ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷக்கிருமிகளும், சமூகவிரோதிகளும் திமுகவினர் தான் என்று ரஜினி மறைமுகமாக சுட்டிகாட்டியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி கூறியது பதவி ஆசை உள்ள தலைவர்களுக்கு சரியான பாடம் என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.