நடிகர் டி.ராஜேந்தர் விமர்சித்த விவகாரத்தில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நடிகை தன்ஷிகா நன்றி தெரிவித்துள்ளார்..!

1016

நடிகர் டி.ராஜேந்தர் விமர்சித்த விவகாரத்தில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நடிகை தன்ஷிகா நன்றி தெரிவித்துள்ளார்.
விழித்திரு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை தன்ஷிகா பேசும்போது, அதில் கலந்துகொண்ட நடிகர் டி.ராஜேந்தரின் பெயரை கூற தவறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த டி.ராஜேந்தர் மேடையிலேயே தன்ஷிகாவை விமர்சித்தார். இதற்கு தன்ஷிகா காலில் விழுந்து மன்னிப்பு கோரிய பிறகும் டி.ராஜேந்தர் அவரை விமர்சித்து கொண்டிருந்தார். இதனால் மனவேதனை அடைந்த தன்ஷிகா கண்கலங்கி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.