பிரதமர் மோடி இருக்கும்வரை அ.தி.மு.கவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..!

248

பிரதமர் மோடி இருக்கும்வரை அ.தி.மு.கவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அ.தி.மு.க 46 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பிரதமர் மோடியின் ஆதரவு அ.தி.மு.கவிற்கு இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை மீட்பது உறுதி என்றார். முதலமைச்சராக ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு ஒரு போதும் பலிக்காதும் என்றும் அவர் தெரிவித்தார்.