அதிமுக ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சியமைக்க முடியாது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

384

அதிமுக ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சியமைக்க முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் அதிமுக அரசின் ஓராண்டு கால சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மத்தியில் அமைந்த அரசுகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெருந்தன்மையுடன் ஆதரவு கொடுத்ததுபோல் இனிமேல் கொடுக்கப்போவதில்லை என்றார். மேலும் 10 அமைச்சர் பதவிகளைக் கொடுத்தால் மட்டுமே மத்தியில் அமையவுள்ள அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உறுதிபடத் தெரிவித்தார்.