அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவு..!

309

பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதன் முதல் விசாரணை அறிக்கையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி ராஜேந்திர பாலாஜி 2008ம் ஆண்டு திருத்தங்கல் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்த சமயத்திலிருந்து அவர் ஊழலில் ஈடுபட்டாரா என்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.