அதிமுக இணைப்பு நடவடிக்கை நூறு சதவீதம் நடைபெறும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

211

அதிமுக அணிகள் இணைப்பு நடவடிக்கை நூறு சதவீதம் நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பால் கலப்படம் தொடர்பாக ரகசியமாக பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், பொதுமக்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்களுக்கு, பின்பலமாக செயல்பட்டு வரும் பால்முகவர் பொன்னுசாமி ஒரு இடைத்தரகர் என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, தன்னை அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்திய வைகைச் செல்வன் ஒரு ஏமாற்று பேர் வழி என்று குறிப்பிட்டார். பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் ஒன்றுபடுவதில் காலம் தாமதமானாலும், இணைப்பு நடவடிக்கை நூறு சதவீதம் நடைபெறும் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.