ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சி பொய் புகார்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

482

பணப்பட்டுவாடா குறித்து ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டை கூறி வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடினார்.
டிசம்பர் 21-ம் தேதி நடைபெறஉள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.இதில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாக அமைச்சர்களும், அரசியல் கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அ.திமு.கவின் சாதனைகளை விளக்கி தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆளும் கட்சி என்றாலே பணப்பட்டுவாடா செய்கிறார்கள் என்ற புகார் வருவது இயல்பான ஒன்று தான் என தெரிவித்துள்ளார்.
இதே போல் தி.மு.க வேட்பாளர் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரித்தார். அப்போது தி.மு.க வெற்றி பெற்றால் ஆர்.கே.நகர் தொகுதியின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.