ராஜஸ்தானில் சென்னை காவல் ஆய்வாளர் சுட்டுக் படுகொலை!

525

ராஜஸ்தானுக்கு கொள்ளையர்களை பிடிக்க சென்ற சென்னை காவல் ஆய்வாளர் சுட்டுக் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் சிக்னல் அருகே உள்ள நகை கடை ஒன்றில் கடந்த நவம்பர் மாதம் மூன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக தமிழக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கொள்ளையர்களை பிடிப்பதற்காக 6 தனிப்படையினர் ராஜஸ்தான் விரைந்துள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் சென்னை மதுரவாயல் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியப்பாண்டி சுட்டுக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் கொளத்தூர் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் முனிசேகர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து அம்பத்தூர் காவல்துறை இணை ஆணையர் சந்தோஷ் அவசரமாக ராஜஸ்தான் விரைந்துள்ளார். கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.