ராஜஸ்தான் ஜெய்பூரில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரங்கோலி போட்டு பொதுமக்கள் கின்னஸ் சாதனை …!

291

ராஜஸ்தான் ஜெய்பூரில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரங்கோலி போட்டு பொதுமக்கள் கின்னஸ் சாதனைப்படைத்துள்ளனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரங்கோலி கோலம் போட்டு, கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். நாட்டு மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையுடன் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டதாகவும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.