நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 70-க்கும் மேற்பட்ட அகதிகளை லிபிய கடற்படையினர் மீட்டனர்!

113

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 70-க்கும் மேற்பட்ட அகதிகளை லிபிய கடற்படையினர் மீட்டனர்.
வறுமை மற்றும் உள் நாட்டுப் போர் காரணமாக ஆப்ரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி கடல் மார்க்கமாக பயணித்து ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இப்படி படகில் பயணித்த மக்கள் சிலர் லிபிய கடற்பகுதி அருகே தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளனர். இதை பார்த்த லிபிய கடற்படையினர் மீட்பு கப்பல் மூலமாக படகில் இருந்த 19 பெண்கள் உட்பட 75 பேரை மீட்டனர்.