ராஜஸ்தானில் சர்வதேச ஒட்டக திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

475

ராஜஸ்தானில் சர்வதேச ஒட்டக திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் ஆண்டுதோறும் ஜனவரி 14ம் தேதி, ஒட்டகத் திருவிழா துவங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஒட்டக திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. விழாவில் ஒட்டக பந்தயம், ஒட்டகச் சவாரி என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பாலைவனத்தை கடக்க பயன்படும் ஒட்டகத்தை சிறப்பு செய்யும் வகையில் இந்த திருவிழா நடத்தப்பட்டது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், பார்வையாளர்கள் திரளாக பங்கேற்று ஒட்ட நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்ந்தனர்.