வெள்ளப்பெருக்கால் ராஜஸ்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முடங்கி வருகிறது.

301

வெள்ளப்பெருக்கால் ராஜஸ்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முடங்கி வருகிறது.
தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டியது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிரோஹி பகுதியில், வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்ததால், அங்கு தங்கி இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ளப்பெருக்கின் கோர தாண்டவம் இன்றுவரை அடங்காததால், ராஜஸ்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.