ஆல்வார் நகரத்துக்குள் வலம் வந்த சிறுத்தைப் புலி | மிரண்டு போன ஊர்மக்கள்

96

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து சிறுத்தைப்புலி ஒன்று ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான்மாநிலம் ஆல்வார் நகரத்துக்கு அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து சிறுத்தைப்புலி ஒன்று நேற்று மாலை ஊருக்குள் திடீரென்று புகுந்தது. தெருக்களில் உலா வந்த சிறுத்தைப்புலியைக் கண்டு மிரண்ட ஊர் மக்கள் வனக்காவலர்களுக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனக்காவலர்கள் சிறுத்தைப் புலியை பிடிக்க கடுமையாக போராடினர். 7 மணி நேரத்துக்கும் மேல் போக்குக் காட்டிய சிறுத்தை தளர்ந்து போனதால் வனக்காவலர்களிடம் சிக்கியது. இதையடுத்து அவர்கள் சிறுத்தையை கூண்டுக்குள் அடைத்து காட்டுக்குள் விட்டனர்.