ராஜஸ்தான் பாலைவனத்தில் எம்பி-ஏடிஜிஎம் ஏவுகணை சோதனை வெற்றி..!

83

ராஜஸ்தான் பாலைவனத்தில் இந்திய ராணுவத்தின் புதிய ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ராணுவத்தில் பயன்படுத்தப்படவுள்ள எம்பி-ஏடிஜிஎம் ஏவுகணை 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கக்கூடிய வல்லமை பெற்றது. இந்த ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்தநிலையில், எம்பி-ஏடிஜிஎம் ஏவுகணை சோதனையை, டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்றிரவு ராஜஸ்தான் பாலைவனத்தில் வெற்றிகரமாக சோதனை நடத்தியது.