கோடைமழை, சூறைக்காற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி..!

103

கோடைமழை, சூறைக்காற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன. இந்த புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் மத்தியபிரதேசத்தில் புயல் மழையில் சிக்கி, கடந்த 2 நாட்களில் 16 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மணிப்பூர் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் மழை மற்றும் சூறைக்காற்றில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கபோவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது.