ராஜபாளையம் அருகே லாரி, கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

848

ராஜபாளையம் அருகே லாரி, கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரளாவை சுற்றிப்பார்க்க, லட்சுமி நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் சென்றனர். அவர்கள் கேரளாவில் பல சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு, மதுரையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்துக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காரில் பயணம் செய்த டிரைவர் மகேஷ், அவரது மனைவி ரத்னா, லட்சுமி நாராயணன் மனைவி கலாவதி, மகள் தீட்சிதா, சங்கரா கவுடா, தாரா ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, ராஜபாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி பிரவீன் என்பவர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்தது. லட்சுமி நாராயணன் பலத்த காயங்களுடன், உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரில் பயணம் செய்தவர்களில், சாந்தா என்பவர் மட்டுமே சுய நினைவுடன் காணப்படுகிறார். இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் ராமகிருஷ்ணனை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.