இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

190

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ராஜபக்சே குடும்பத்தினரின் மீது தொடர்ந்து பல்வேறு வகையான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அனைத்து புகார்களுக்கும் உரிய விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இலங்கை நாடாளுமன்ற எம்.பி.யாக உள்ள அவர், பல்வேறு பெண்களிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக 3 பேர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், 4 நட்சத்திர ஓட்டல்களில் பல பெண்களிடம் அவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுவரை நாமல் ராஜபக்சேவுக்கு எதிராக 109 பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.