இலங்கைக்கு இந்தியா போர் பயிற்சி அளித்தது உண்மை கொத்தபய பரபரப்பு தகவல் !

224

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி அளித்தது உண்மைதான் என அந்நாட்டு முன்னாள் பாதுகாப்பு செயலர் கொத்தபய தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான், உக்ரேன், ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் விமானங்களை வழங்கியதாக கூறினார். மிக் ரக போர் விமானங்களை உக்ரேன், ரஷ்யா அளித்து இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்ததாக தெரிவித்த கொத்தபய ராஜபக்சே, இந்தியாவும் தன் பங்குக்கு இலங்கைக்கு உதவி அளித்தாக கூறினார்.
இறுதிக்கட்ட போரின்போது, இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியா போர் பயிற்சி வழங்கியதாக அவர் கூறினார். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அப்போதைய மன்மோகன் சிங் அரசு இலங்கைக்கு ஆயுத உதவி எதுவும் செய்யவில்லை என்று கொத்தபய ராஜபக்சே தெரிவித்தார். இறுதிக்கட்ட போரின்போது இலங்கை ராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை என காங்கிரஸ் கட்சி கூறி வரும் நிலையில், கொத்தபய ராஜபக்சேவின் இந்த கருத்து தமிழக அரசியல் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது