ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக வேண்டிய நிலை

231

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலைக்கு ராஜபக்சே தள்ளப்பட்டார்.

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேயுக்கும் இடையேயான பனிப்போரில் கடந்த மாதம் 26-ந் தேதி அதிரடி திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து ரனிலை நீக்கியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமர் பதவியில் அமர்த்தியும் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல தரப்பிலும் குரல் வலுத்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை இன்று கூட்டி சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டார்.

இருப்பினும் ராஜபக்சே குதிரைப்பேரம் நடத்தியும், பெரும்பான்மையை நிரூபிக்கத்தக்க அளவுக்கு தேவையான எம்.பி.க்கள் கிடைக்க வில்லை. பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு இடைேய இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலைக்கு ராஜபக்சே தள்ளப்பட்டார்.