18எம்எல்ஏ-களை சஸ்பெண்ட் செய்திருக்கலாம் – ராஜன் செல்லப்பா, அதிமுக எம்எல்ஏ

1397

18 எம்எல்ஏ-களின் பதவியை பறித்ததை விட, அவர்களை சஸ்பெண்ட் செய்திருக்கலாம் என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மதுரை நகரின் வளர்ச்சிக்காக அறிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்திற்கும் அரசாணை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என ராஜன் செல்லப்பா வருத்தம் தெரிவித்தார். உள்ளாட்சி நிர்வாகத்திலும் பணிகள் அனைத்து முடங்கி போய்யுள்ளன என குற்றஞ்சாட்டிய அவர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் ஆய்வு நடத்தவில்லை என்று கூறினார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் பதவியை பறித்ததைவிட அவர்களை சஸ்பெண்ட் செய்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.