உறுப்பினர்களின் கேள்விகளுக்கு

சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ராஜலட்சுமி பதிலளித்து பேசுகிறார்.

சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தொடங்கப்படும் என்றும், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 சார்பதிவாளர் அலுவலகங்கள் நவீன மயமாக்கப்படும் எனவும் அறிவித்தார். கட்டுமான தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு 5 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். அத்துடன், ஹஜ் பயணிகளுக்கு 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும், இதன்மூலம் நடப்பு ஆண்டில் 3 ஆயிரத்து 828 பேர் பயனடைவார்கள் எனவும் முதல்வர் கூறினார்.

இந்தநிலையில், சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ராஜலட்சுமி பதிலளித்து பேசுகிறார்.