ராஜாக்கமங்கலம் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்று மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

277

ராஜாக்கமங்கலம் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்று மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் துறையில் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி செல்வது வழக்கம். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மீனவர் பன்னீர்செல்வம் தன்னுடைய படகை கடற்கரையில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். திடீரென்று அவரது படகு மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு படையினர், தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் படகு முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவுசெய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.