சரவணபவன் அதிபர் ராஜேகோபாலின் உடல் நாளை அடக்கம்..!

160

ஹோட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் புன்னைநகரில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், ராஜகோபாலை உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 9-ம் தேதி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்த ராஜகோபால், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் உடல் நிலை மோசமாக இருப்பதால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜகோபால் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைநகரில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக புன்னனை நகரில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. இதற்காக புன்னை நகரில் உள்ள பண்ணை வீட்டில் ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. உடல் அடக்கம் செய்யப்படும் இடமும், சுத்தப்படுத்தப்பட்டு அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.