அப்பல்லோ மருத்துவர் அர்ச்சனாவிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 30 பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார்.

இந்தநிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான அர்ச்சனாவின் குரல், அண்மையில் வெளியான ஜெயலலிதாவின் ஆடியோவில் இடம்பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன், மருத்துவர் அர்ச்சனாவிடம் குறுக்கு விசாணை நடத்த வேண்டும் என, விசாரணை ஆணையத்தில்
கேட்டுக்கொண்டார். இன்று ஆஜராகியுள்ள மருத்துவர் அர்ச்சனாவிடம் ராஜாசெந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.