ஜெயலலிதா எண்ணம் நிறைவேறும் தருவாயில் உள்ளது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…..!

355

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேறும் தருவாயில் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்…

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிட முன்னேற்ற கழகத்தினருக்கு எப்போதும் ஏதாவது ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என விமர்சித்தார். நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டங்களை அதிமுக அரசு சந்தித்து வருவதாக சுட்டிக் காட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இதற்கு எல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பயப்படாது என்றார். அதேசமயம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேறும் தருவாயில் இருப்பதாக அவர் கூறினார்.