ரயில்வே ஊழியரின் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

267

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் தமது மகளை பார்ப்பதற்காக மனைவியுடன் கோவை சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர்கள், வீட்டின் சன்னல் கதவை உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 சவரன் தங்கநகைகள் மற்றும் ரொக்கபணம் ஆகியவை கொள்ளை போனதாக தெரிவித்தார். இதுகுறித்து வழக்கு பதிவுசெய்துள்ள போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு மாதிரிகளை பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.