தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

268

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் உள் மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், பாலக்கோடு, குன்னூரில் 7 சென்டி மீட்டர் மழையும், காஞ்சிபுரம், கரூரில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.