5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

211

5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகமாக காணப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது