ரெய்னா, யுவராஜ் அணியில் மீண்டும் இடம்பெறலாம் : இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து

633

ரெய்னா,யுவராஜ் அணியில் மீண்டும் இடம்பெறலாம் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ தேர்வு குழு நடத்திய புதிய உடற்பயிற்சி சோதனையால் யுவராஜ் சிங் மற்றும் ரெய்னாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் யுவராஜ் சிங் மற்றும் ரெய்னா அணியில் இனி இடம்பெற மாட்டார்கள் என்ற எண்ணம் உருவாகியிருந்தது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, உடல் தகுதி, பீல்டிங் ஆகியவற்றின் சிறப்பாக செயல்பட்டால் ஒவ்வொரு வீரரும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறினார். அந்த வகையில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.