தமிழகத்தில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

295

தமிழகத்தில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். பருவமழை தவறிய காரணத்தால் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானல் முழுவதும் குளிர்ந்து காணப்பட்டதால், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.