நடப்பாண்டு பருவமழை சிறப்பாக இருக்கும் | இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

285

நடப்பாண்டு எதிர்ப்பார்த்ததை விட பருவமழை சிறப்பாக பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை 96 சதவீதம் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எதிர்பார்த்ததை விட கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பருவமழையின் போது பிற்பாதியில் எல் நினோவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் நடப்பாண்டு மழையின் அளவு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 96 சதவீதமும், ஆகஸ்ட் மாதம் 99 சதவீதம் மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.