தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

550

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும், பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்தநிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோன்று, நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.