கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

162

வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர மாவட்டங்களின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், கடற்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளது.
பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கோவை, வேலூர், சேலம் மாவட்டத்தில் கனமழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், தேனி, தருமபுரி, கடலூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாகவும் மழை பெய்துள்ளது.