மும்பையை புரட்டிபோட்ட கனமழை..!

162

மும்பையில் தொடரும் கனமழை காரணமாக நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. சாலைகளில் சுமார் 2 அடி உயரத்திற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.மழை நீர் தேக்கத்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்கின்றன.
தண்டவாளங்களிலும் மழை நீரில் மூழ்கியதால் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர். தொடர் மழையால் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழை காரணமாக, மாநில சட்டப்பேரவை வளாகத்தில் மழை நீர் புகுந்தது தொடர்பாக விசாரணைக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.